பொது செய்தி

தமிழ்நாடு

தர்பூசணி சாகுபடி துவக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement
 தர்பூசணி சாகுபடி துவக்கம்

மாமல்லபுரம்:கோடைக்கால விற்பனைக்காக, தர்பூசணி சாகுபடியை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து, தற்போது பனி பொழிகிறது. அடுத்த சில மாதங்களில், கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிக்கிறது.

இந்நிலையில், கோடைக் காலத்தில் தேவைப்படும் என்பதற்காக, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், விவசாயி கள் பலர், தர்பூசணியை பயிரிடுகின்றனர்.இது குறித்து, மணமை கிராம விவசாயிகள் கூறியதாவது:ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட, 15 - 20 ஆயிரம் ரூபாய் வரை செலவா கிறது. கிடைக்கும் பழங்களை வைத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கலாம். கோடைக்காலத்தை குறிவைத்து, இப்போதே தர்பூசணி சாகுபடியை துவக்கியுள்ளோம். அறு வடைக்கு முன், மழை பெய்யாமல் இருந்தால், நிச்சயம் லாபம் கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X