தமிழ்நாடு

அடுத்தடுத்த பயிற்சிகளால் ஆசிரியர்கள் குமுறல் மாணவர்களுக்கு கற்பித்தல் பாதிப்பு

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 அடுத்தடுத்த பயிற்சிகளால் ஆசிரியர்கள் குமுறல் மாணவர்களுக்கு கற்பித்தல் பாதிப்பு


மதுரை: மதுரையில் அடுத்தடுத்த பயிற்சிகளில் ஆசிரியர்கள் பங்கேற்பதால் கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது செய்முறை தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும், உயர்நிலையில் மூன்றாம் இடைப்பருவ தேர்வும் நடக்கிறது. இறுதிகட்ட பாடங்களை நடத்தி பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய நெருக்கடியில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில் அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடப்பதால் கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: தற்போது மாணவர் பொது தேர்வுக்கு தயார் படுத்தும் பணியில் எங்கள் கவனம் உள்ளது. இந்நேரத்தில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு பயிற்சி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓருங்கிணைந்த கணினி பயிற்சி, முதுகலை ஆசிரியர்ருக்கு வணிகவியல் பொருளியல் பயிற்சி என அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது.
கல்வியாண்டு துவக்கத்திலேயே பயிற்சிக்கு திட்டமிடாமல் ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிடும் என்பதற்காக கடைசி நேரத்தில் மொத்த பயிற்சிகளையும் நடத்துவதால் மன உளைச்ச் ஏற்படுகிறது.அடுத்தாண்டு கல்வியாண்டு துவக்கம் அல்லது இடையில் பயிற்சிகள் நடத்த திட்டமிட வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan kr - madurai ,இந்தியா
13-பிப்-202014:29:24 IST Report Abuse
kumaresan kr காலாண்டு ,அரையாண்டு மற்றும் கோடை விடுமுறைகளை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் காலங்களாக முறைபடுத்தலாம் .
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
13-பிப்-202007:28:28 IST Report Abuse
Girija சக்கர சக்கர இனிக்கிற சக்கர, நீங்கதான் புத்தாக்கம் பயிற்சிக்கு சென்றால் கொண்டாட்டம் போடுவீர்களே? உங்களுக்கா கசக்கும் ? அரசு பள்ளியில் பத்து பதினொன்று பன்னிரண்டு கற்பிக்கும் ஆசிரியர்களும் அந்தந்த வருடம் மாணவர்கள் எழுதும் அதே தேர்வை எழுதவைத்து திறன் அறியவேண்டும். TNPSC போல் இங்கும் எழுத்து தேர்வில் தில்லுமுல்லு செய்து தகுதில்லாதவர்கள் போலி கல்வி சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X