பொது செய்தி

தமிழ்நாடு

18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பக்தவத்சலம் தொழில்நுட்ப கல்லுாரியில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள் சேர்க்கும் முகாம், வரும், 18ம் தேதி நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பக்தவத்சலம் தொழில்நுட்ப கல்லுாரி இணைந்து, வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்க்கும் முகாம், 18ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை, காரப்பேட்டையில் உள்ள பக்தவத்சலம் தொழில்நுட்ப கல்லுாரியில், காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.இதில், எட்டு, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளம, இன்ஜினியரிங் உள்ளிட்ட கல்வி தகுதியுடையோர், தங்களுடைய அனைத்து கல்வி சான்று, ஆதார் அட்டை நகலுடன் இம்முகாமில் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 2723 7124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X