அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Added : பிப் 13, 2020
Share
Advertisement
அலங்காநல்லுார், சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான கால் பந்து போட்டி நடந்தது. இதில் முதல் முறையாக பங்கேற்ற தமிழக அணியில் இடம்பிடித்த அலங்காநல்லுார் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் கவுதம், அங்குசாமி ஆகியோர் அணியின் கேப்டனாக செயல்பட்டனர்.தமிழக அணி மூன்றாமிடம் பிடித்தது. மாணவர்களை தலைமை ஆசிரியர் பிராகரன்ஸ் லதா, உதவி தலைமை



அலங்காநல்லுார்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான கால் பந்து போட்டி நடந்தது. இதில் முதல் முறையாக பங்கேற்ற தமிழக அணியில் இடம்பிடித்த அலங்காநல்லுார் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் கவுதம், அங்குசாமி ஆகியோர் அணியின் கேப்டனாக செயல்பட்டனர்.தமிழக அணி மூன்றாமிடம் பிடித்தது. மாணவர்களை தலைமை ஆசிரியர் பிராகரன்ஸ் லதா, உதவி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சக்திகுமார், விக்டர், உடற்கல்வி இயக்குனர் ஞானசேகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் காட்வின், முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.மாநில நீச்சல் போட்டிநெல்லை அணி வெற்றிமதுரை, பிப். 13 -

மாநில மற்றும் மதுரை நீச்சல் சங்கம் சார்பில் மாநில ஷாட்கோர்ஸ் நீச்சல் போட்டிகள் ரேஸ்கோர்ஸில் நடந்தன.தமிழகம் முழுவதிலும் இருந்து 30 அணிகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 370 புள்ளிகளை பெற்று நெல்லை பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி கோப்பை வென்றது. 309 புள்ளிகள் பெற்ற மதுரை அணி ரன்னர் கோப்பையை வென்றது.சங்க துணைத் தலைவர் ஸ்டாலின், செயலாளர் சந்திரசேகர், நுகர்பொருள் வியாபாரிகள் சங்க செயலாளர் மோகன் பதக்கம், சான்றிதழ் வழங்கினர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் பங்கேற்றனர்.சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் அமிர்தராஜ், துணைத் தலைவர் சிவபாலன், துணைச் செயலாளர் இளமுருகன், பயிற்சியாளர் ரமேஷ் பாண்டி ஒருங்கிணைத்தனர்.கல்வியியல் பல்கலை போட்டி

மதுரை ரேஸ்கோர்ஸில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில் மாவட்ட விளையாட்டு, கலாசார போட்டிகள் நடந்தன.ஈட்டி எறிதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும், கட்டுரை, பேச்சு போன்ற கலாசார போட்டிகளிலும் 14 கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி கோப்பையை வென்றது. பேரையூர் கே.கே.ஜி., கல்வியியல் கல்லுாரி தனி நபர் கோப்பையை வென்றது.போலீஸ் உதவி கமிஷனர் ஜஸ்டின் பிரபாகர், பல்கலை பேராசிரியர் ராமகிருஷ்ணன், ஜஸ்டின் கல்லுாரி முதல்வர் மேரி டெல்பின் பங்கேற்றனர்.மாணவிகளுக்கு கராத்தே போட்டிவாடிப்பட்டி, பிப்.13 ---

வாடிப்பட்டி சோபுகாய் கோஜிரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்ற வட்டார அளவிலான கராத்தே போட்டி நடந்தது.தமிழ்நாடு மாநில கராத்தே சங்க துணைத்தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜெயசித்ரா, சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட துணை செயலாளர் காளிதாஸ் வரவேற்றார். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு தொழிலதிபர் செந்தில்குமார் சான்றிதழ், பதக்கம் வழங்கினார். பயிற்சியாளர் பரத் நன்றி கூறினார்.தங்கம் வென்றபெண் இன்ஸ்பெக்டர்மதுரை, பிப். 13 -

மத்தியபிரதேசம் மாநிலம் போபாலில் நடந்த போலீசாருக்கான அகில இந்திய பூப்பந்து போட்டியில் மதுரை இன்ஸ்பெக்டர் ஹேமா மாலா தங்கப் பதக்கம் வென்றார்.தமிழக காவல்துறை சார்பில் பங்கேற்று முதலிடத்தில் வெற்றி பெற்ற இவரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X