குடும்ப வாரிசுகளுக்காக ஸ்டாலின் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப வாரிசுகளுக்காக ஸ்டாலின் போராட்டம்

Added : பிப் 13, 2020
Share

வாடிப்பட்டி, ''குடும்ப வாரிசுகளை அதிகாரத்திற்கு கொண்டு வரவே ஸ்டாலின் போராடுகிறாரே தவிர மக்கள் நலனுக்காக இல்லை'' என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.சமயநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது: விவசாயிகளை அரசுக்கு எதிராக திசை திருப்ப நினைத்த எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது. முதல்வர் பழனிச்சாமி செயல்வீரர் என்பது பல திட்டங்களில் தெரிகிறது. குடும்ப வாரிசு களை அதிகாரத்திற்கு கொண்டுவரவே ஸ்டாலின் போராடுகிறாரே தவிர, மக்கள் நலனுக்காக எந்த போராட்டத்தையும் முன் எடுக்கவில்லை. அதனால் தான் அவர்களது போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X