தமிழ்நாடு

நெல் தரிசில் பயிர் வகையை விதைங்க! விவசாயிகளுக்கு யோசனை

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் பகுதியில் நெல் அறுவடை செய்த தரிசு நிலங்களில் வறட்சியை தாங்கும் பயிர் வகைகளை விதைத்து விவசாயிகள் லாபம் பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.இப்பகுதிகளில் விவசாயிகள் பலர் நெல் அறுவடை செய்து வருகின்றனர். கிணறுகளில் தண்ணீர் உள்ளவர்கள் கோடை விதைப்புக்கு தயாராகி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் கிடைக்காத விவசாயிகள் நெல் தரிசு நிலங்களில் குறுகியகால பயிர்களான உளுந்து, பாசி பயறு விதைக்கலாம்.வறட்சியை தாங்கி வளரக்கூடிய இவைகள் 65 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். நிலங்களில் தற்போதுள்ள ஈரப்பதமே போதுமானது. கோடை மழை பெய்தால் தண்ணீர் தேவையில்லை. ஏக்கருக்கு 8 கிலோ விதை போதும். செலவு மிகக்குறைவு. உரம் தேவையில்லை. குறைந்தளவு டி.ஏ.பி., கரைசல் தெளித்தால் அனைத்து பூக்களும் காய்களாகி, காய்கள் திரட்சியாக வளரும். ஏக்கருக்கு 400 கிலோ வரை கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகள் உபரி வருவாய் பெறலாம். நிலமும் பண்படும், என திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குநர் சர்புதீன் அகமது தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X