பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு வாரம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement
 அரசு உயர்நிலைப் பள்ளியில்  தேசிய பாதுகாப்பு வாரம்

புவனகிரி:புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளியில், காரைக்கால் ஓ.என்.ஜி.சி., சார்பில், 49 வது தேசிய பாதுகாப்பு வாரம், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சாத்ரா சத்தியசேகரன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் சம்பத்குமார் வரவேற்றார். ஊராட்சி தலைவர் சாரங்கபாணி, துணைத் தலைவர் இளையராஜா, வார்டு உறுப்பினர்கள் மீனா, கலைவாணி முன்னிலை வகித் தனர்.காரைக்கால் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவசங்கரன், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர், தேர்வை எதிர்கொள்ளும் விதம் குறித்து, மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினர்.பின்னர், தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பாதுகாப்பின் அவசியம் குறித்து செயல் விளக்கம் அளித்ததுடன், கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தினர். ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.ஏற்பாடுகளை புவனகிரி மைய ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், மணிக்கண்ணன் செய்திருந்தனர். பள்ளிக்கு கம்ப்யூட்டர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஊராட்சித் தலைவர் சாரங்கபாணி, ஓ.என்.ஜி.சி., நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார்.அதற்கு படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X