பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்க்கை எந்த திசையில்குழப்பத்தில்: இந்திரா செளந்தராஜன்

Added : பிப் 13, 2020
Advertisement

அவனியாபுரம் ''மாணவர்கள் வாழ்க்கையில் எந்த திசையில் எப்படி செல்வது என தெரியாமல் குழப்பத்தில்வாழ்கின்றனர்'' என எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் நிறுவனர் தின விழா நடந்தது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.இந்திரா சௌந்தர்ராஜன் 'அறம் செய்' என்ற தலைப்பில் பேசியதாவது: தற்போது 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களிடம் வாசிக்கும் பழக்கம்இல்லை. நாளிதழ்களைகூட படிப்பதில்லை. அலைபேசி ஆக்கிரமித்துவிட்டது. இரவு 2:00 மணி வரை அதில் நேரத்தை செலவிடுகின் றனர்.இதுதான் இன்றைய மாணவர்களின் நிலை. வாழ்க்கையில் எந்த திசையில் எப்படி செல்வதுஎனத்தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் வாழ்கின்றனர். சுவாசிப்பு இல்லையனில் உயிர் இல்லை. வாசிப்பு இல்லையெனில் மனம் உடலில் வாழாது. அறம் செய்து வாழ்ந்தால் சிறந்த மனிதராக முடியும், என்றார். வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X