பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பழகுனர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பிப்ரவரி, 19ம் தேதி, காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, தேசிய தொழில் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

இங்கு, 80க்கும் மேற்பட்ட முன்னணி தொழிற் நிறுவனங்கள் மற்றும் அரசு துறை நிறுவனங்களும், நேரடியாக, ஒரே இடத்தில், தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை நடத்துகின்றன.இதில், பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டவர்கள், 8 மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி உதவித் தொகையாக மாதம், 7,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தொழிற் பழகுனர் பயிற்சி முடித்தவர்கள், அரசு பணியில் சேர மேலும், இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு சலுகையும் மற்றும் முன்னுரிமையும் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்; 044 - 2989 4560 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X