சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமையல் செய்தவர் தீயில் கருகி பலி

Added : பிப் 13, 2020
Advertisement

கடலுார்:விறகு அடுப்பில் சமையல் செய்த முதியவர் தீயில் கருகி இறந்தார்.குறிஞ்சிப்பாடி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அழகப்பன்,65: கூலி தொழிலாளி.
இவர் கடந்த 8ம் தேதி வீட்டில் விறகு அடுப்பை பற்றவைத்து சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேன் கவிழ்ந்து தீப்பிடித்து அழகப்பன் உடல் முழுவதும் தீ பரவியது.அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X