ரூ.22 லட்சம் லபக்கியவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.22 லட்சம் லபக்கியவர் கைது

Added : பிப் 13, 2020
Share
மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 22.50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னை அடுத்த பூந்தமல்லி, வைதி அவென்யூ அருகே வசித்து வருபவர் சண்முகம், 59. இவர், குடியாத்தம், மின் வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய போது, சேலத்தைச் சேர்ந்த தேவராஜன், 60, என்பவர் பழக்கமானார்.மின் வாரியத்தில் உள்ள அதிகாரிகள் பலர், தனக்கு நன்கு

மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 22.50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னை அடுத்த பூந்தமல்லி, வைதி அவென்யூ அருகே வசித்து வருபவர் சண்முகம், 59. இவர், குடியாத்தம், மின் வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய போது, சேலத்தைச் சேர்ந்த தேவராஜன், 60, என்பவர் பழக்கமானார்.மின் வாரியத்தில் உள்ள அதிகாரிகள் பலர், தனக்கு நன்கு பழக்கமானவர்கள் என்பது போல, தேவராஜன் காட்டிக் கொண்டார்.

இதை உண்மை என நம்பிய சண்முகம், தன் மகனுக்கு, மின் வாரியத்தில் வேலை வாங்கி தருமாறு கூறி, 22.50 லட்சம் ரூபாயை, தேவராஜனிடம் கொடுத்துள்ளார்.பணத்தை வாங்கிய தேவராஜன், வேலை வாங்கி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சண்முகம், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார், தேவராஜனை நேற்று கைது செய்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X