பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Added : பிப் 13, 2020
Advertisement

காஞ்சிபுரம்:அய்யங்கார்குளம் பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 115 பயனாளிகளுக்கு, 12.15 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் பொன்னையா, நேற்று வழங்கினார்.

காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளம் பகுதியில், மனுநீதி நாள் முகாம், நேற்று நடந்தது. அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், பல தேவைகளுக்காக கோரிக்கை மனு அளித்தனர். இம்முகாமில், 62 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், இருவருக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 31 பயனாளிகளுக்கு உதவி தொகையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், ஐந்து பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.மொத்தம், 115 பயனானிகளுக்கு, 12.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X