பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் சி.சி.டி.வி., கேமரா: டி.எஸ்.பி., துவக்கி வைத்தார்

Added : பிப் 13, 2020
Advertisement
 அரசு பள்ளியில் சி.சி.டி.வி., கேமரா:  டி.எஸ்.பி., துவக்கி வைத்தார்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கண்காணிப்பு கேமராவை டி.எஸ்.பி., கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமா அத் சார்பில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் இந்திரா முருகன் தலைமை தாங்கினார். ஐக்கிய ஜமா அத் தலைவர் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சங்கர் வரவேற்றார். கண்காணிப்பு கேமராவை, டி.எஸ்.பி., கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.விழாவில், இன்ஸ்பெக்டர் இளவழகி, ஜெய்னுல் ஆபூதீன், ஹமீம், வழக்கறிஞர் தங்கவேல், அ.தி.மு.க., அவைத்தலைவர் மலைமோகன், அரிமா சங்க தலைவர் அருள்முருகன், முன்னாள் கவுன்சிலர் காஜா கமால், நிஜாமுதீன், அலாவூதீன், அஷ்ரப் அலி, உதுமான் மாலிமார், ஜெய்னு உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X