பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement
 எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

சிதம்பரம்:எம்.ஆர்.கே. இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எம்.ஆர்.கே பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 19 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் எம்.ஆர்.கே., இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எம்.ஆர்.கே பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை ஸ்ரீ அபிராமி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ரிஷி, மனோஜ்குமார் ஆகியோர் மாணவ மாணவியர்களிடம் நேர்காணல் நடத்தினர்.முகாமில் எம்.ஆர்.கே., இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் இருந்து இ.இ.இ., பிரிவு மாணவர்கள் 12 பேரும், பாலிடெக்னிக் கல்லுாரியில் இருந்து இ.இ.இ.,மற்றும் இ.சி.இ., பிரிவுகளில் இருந்து 48 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 19 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.பணி ஆணை பெற்ற மாணவர்களை கல்லுாரி சேர்மன் கதிரவன் பாராட்டினார். கல்லுாரி முதல்வர்கள் ஆனந்தவேலு, வெங்கடேசன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X