பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு பிராமணர் சங்க கூத்தப்பாக்கம் கிளை கூட்டம்

Added : பிப் 13, 2020
Advertisement

கடலுார்:கடலுார், கூத்தப்பாக்கத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை கூட்டம் நடந்தது.
ராஜாராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜகோபாலன் வரவேற்றார். பொருளாளர் கணேசன் வரவு செலுவு கணக்கை படித்தார்.கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி தேர்தல் மற்றும் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவராக ராஜாராமன், இணைச்செயலராக கணேசன், மகளிரணி இணை செயலராக ராஜேஸ்வரி பொறுப்பேற்றனர். இவர்களுக்கு சுரேஷ், திருமலை வாழ்த்து தெரிவித்தனர்.கூட்டத்தில் சம்பத் சார்பில் விஷ்ணுசஹஸ்ர நாம புத்தகம் வழங்கியதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மஞ்சக்குப்பம் கிளை தலைவர் திருமலை சங்க பணிகள் குறித்து பேசினார். சேகர், சுரேஷ் ,ராமலிங்கம் ஸ்ரீநிவாசன், ராமகிருஷ்ணன், லட்சுமிநாராயணன், பாலசுப்ரமணியன், டி.சங்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிேஷகம், அர்ச்சனை செய்யவும், உறுப்பினர் சேர்க்கை, தம்புராஸ் மாத இதழ் சந்தா புதுப்பித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எஸ்.சங்கரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X