தமிழ்நாடு

திறக்கப்படும்?ராமசமுத்திரம் சமத்துவபுரம் எப்போது...;கட்டி முடிக்கப்பட்ட 100 குடியிருப்புகள் காத்திருப்பு:

Added : பிப் 13, 2020
Advertisement
 திறக்கப்படும்?ராமசமுத்திரம் சமத்துவபுரம் எப்போது...;கட்டி முடிக்கப்பட்ட 100 குடியிருப்புகள் காத்திருப்பு:

பள்ளிப்பட்டு:ராமசமுத்திரம் சமத்துவபுரம் குடியிருப்புகள், பயனாளிகளுக்கு ஒதுக்கப் படாததால், 10 ஆண்டுகளாக பாழடைந்து வருகின்றன. குடிநீர், சாலை, மின்சாரம், நுாலகம், ரேஷன் கடை என, சகல வசதிகள் இருந்தும் பயன்படுத்த ஆளின்றி அந்த கிராமமே வெறிச்சோடி கிடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில், 2010ல், சமத்துவபுரம் ஏற்டுத்தப்பட்டது.ரூ.2.45 கோடியில் கட்டப்பட்ட இந்த சமத்துவபுரத்தில், நேர்த்தியான தார் சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, பூங்கா, ரேஷன் கடை, நுாலகம் என, அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


எதிர்பார்ப்பு

மத்துார் -- வங்கனுார் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்ப சாலை வசதி உள்ளது.தி.மு.க., ஆட்சிக்காலத் தில் ஏற்படுத்தப்பட்ட சமத்துவபுரம் என்பதால், அடுத்தடுத்து ஆட்சியை பிடித்த, அ.தி.மு.க., அதை திறக்கவில்லை என, அரசியல் வட்டாரத்தில் கூறப் படுகிறது.

தற்போது, அரக்கோணம் தொகுதி எம்.பி., யாக, தி.மு.க., - எம்.பி., பொறுப்பேற்றுள்ள நிலையில், சமத்துவபுரத்தை திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என, பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மறு சீரமைப்பு

சமத்துவபுரத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய, மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. நிழல் தரும் ஆலமரமும் உள்ளது.சமத்துவபுரம் பயன்பாட்டிற்கு வராததால், நுழைவாயில் அருகே உள்ள பூங்கா அழிந்து விட்டது.

மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக, கொண்டு வரப்பட்ட சிமென்ட் குழாய்கள் மட்டும் பதிக்கப் படாமல் கிடத்தி வைக்கப்பட்டு உள்ளன.குடியிருப்புகளின் கதவு, ஜன்னல் வாயிற்படி உள்ளிட்டவற்றை மறு சீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


திட்டவரைவு



சமத்துவபுரம் திறக்கப்படுவதற்குள், கட்டடம் வீணாகி, யாருக்கும் பயனின்றி வீணாகும் அவலம் உள்ளது.இது குறித்து, பள்ளிப்பட்டு ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை மறு கட்டமைப்பு செய்வதற்காக, திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.பயனாளிகளிடம் ஒப்படைப்பதற்கு முன், அவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X