சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

Added : பிப் 13, 2020
Advertisement

கடலுார்:மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் தீக் குளிக்க முயற்சி செய்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்புச்செல்வன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் இருந்து முதல்வரின் தனிப்பிரிவில் வழங்கப்பட்ட 4,683 மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 4,549 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.அதேமாதரி பொது மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 9,234 மனுக்களில் 8,927 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டரின் தலைமையில் பிரதி மாதம் கோட்ட அளவில் சப் கலெக்டரின் தலைமையில் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1018 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.இவைத்தவிர கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்காக அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே பிரதி மாதம் தாலுகா வாரியாக கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சப் கலெக்டர்களின் தலைமையில் நடைபெற்று வரும் மனு நீதி நாள் முகாம்களில் 2,592 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அனைத்து இடங்களிலும் பெறப்பட்ட83,615 மனுக்களில், மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் 83,074 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதியுள்ள 541 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திங்கள் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சிலர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீக்குளிக்க முயல்வது தவறான செயலாகும். இவ்வாறு பொது மக்கள் அமைதிக்கும் மாவட்ட நிர்வாக நலனுக்கும் குந்தமாக செயல்படுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X