பொது செய்தி

தமிழ்நாடு

மொலாசஸ் கொட்டியதால் விபத்து: 25 பேர் காயம்

Added : பிப் 13, 2020
Advertisement

பண்ருட்டி:விழுப்புரம், முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் இருந்து நேற்று மாலை டி.என்.31. ஏஇசட் 5585 பதிவெண் கொண்ட டேங்கர் லாரி கரும்பு மொலாசசை ஏற்றிக் கொண்டு பண்ருட்டி வழியாக காடாம்புலியூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
இரவு 8:30 மணி அளவில் மேல்மாம்பட்டு அருகே சென்றபோது, டேங்கர் மூடி கழற்றிக் கொண்டு மொலாசஸ் சாலையில் ஊற்றியபடி காடாம்புலியூர் வரை சென்றது. இதனால், சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகினர். இவர்களில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, சாலையில் மொலாசசை ஊற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X