பொது செய்தி

இந்தியா

ஆயுர்வேத மருத்துவ முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement
 ஆயுர்வேத மருத்துவ முகாம்

பாகூர்:குருவிநத்தம் கிராமத்தில், இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது.
இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் சார்பில் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவ பிரிவு மூலமாக நடைபெற்ற முகாமை, ஆயுர்வேத மருத்துவ பிரிவு திட்ட அதிகாரி புருஷோத்தமன் துவக்கி வைத்தார். சுகாதார நிலைய தலைமை மருத்துவர் உமாசங்கர், நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வது, அதற்கான உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பேசினார்.
முகாமில், முதுமையில் ஏற்படும் நோய்களுக்கான காரணங்கள், அப்பிரச்னையை தீர்க்கும் மூலிகைகள் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி நடந்தது.முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக ஆயுர்வேத மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை, பாகூர் ஆயுர்வேத மருத்துவ பிரிவு டாக்டர் புவனேஸ்வரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X