பொது செய்தி

இந்தியா

கோவில் குளம் ஆக்கிரமிப்பு: சப் கலெக்டர் ஆய்வு

Added : பிப் 13, 2020
Advertisement
 கோவில் குளம் ஆக்கிரமிப்பு: சப் கலெக்டர் ஆய்வு

பாகூர்:கன்னியக்கோவிலில் ஆக்கிரமிப்பில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் குளத்தை, சப் கலெக்டர் சஷ்வத் சவுரப் ஆய்வு செய்தார்.
கன்னியக்கோவிலில் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, சுருங்கி வருகிறது. கரை பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு, அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் குளத்தில் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்க கோரி, கோவில் நிர்வாகம் தரப்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கலெக்டர் அருண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்தை ஆய்வு செய்தார்.இந்நிலையில், தெற்கு மாவட்ட சப் கலெக்டர் சஷ்வத் சவுரப் நேற்று, கன்னியக்கோவிலுக்கு சென்று, பச்சைவாழியம்மன் கோவில் குளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொது மக்கள், கோவில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சப் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.இது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் சஷ்வத் சவுரத் கூறினார். பாகூர் தாசில்தார் குமரன், வருவாய் ஆய்வாளர் முருகையன், கிராம நிர்வாக அதிகாரி அருட்பெருஞ்ஜோதி, பச்சைவாழியம்மன் கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.முன்னதாக, கன்னியக்கோவிலில் உள்ள வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற சப் கலெக்டர், கோப்புகளை ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X