பொது செய்தி

இந்தியா

மாணவர்கள்-விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

Added : பிப் 13, 2020
Advertisement
 மாணவர்கள்-விவசாயிகள்  கலந்துரையாடல் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்:ஏரிப்பாக்கத்தில், இயற்கை விவசாயம் குறித்து மாணவர்கள்-விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கரியமாணிக்கம் உழவர் உதவியகம் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், மணிலா சாகுபடி செயல்விளக்க முகாம், ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில், விவசாயிகள் - மாணவர்கள் கலந்துரையாடல் நேற்று நடந்தது. வேளாண் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர் ரவி, மணிலாவில் நுண்ணுாட்டச்சத்து பயன்பாடு, காய் பிடிக்கும் தருணத்தில் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகளுக்கு மணிலா நுண்ணுாட்டச்சத்து வழங்கப்பட்டது.நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X