பைக்குகள் மோதல் ஒருவர் பலி

Added : பிப் 13, 2020
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார்
.நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வம், 21; நாகூர் பகுதியை சேர்ந்தவர் சித்திரவேல், 30. இருவரும் கடந்த 10ம் தேதி, மோட்டார் சைக்கிளில் காரைக்கால் வந்தனர்.பாரதியார் சாலையில், வரிச்சிக்குடியை சேர்ந்த ஜீவானந்தம், 35; பச்சூர் தன்ராஜ்,50, ஆகியோர் சென்ற பைக் திடீரென நின்றது. அந்த வாகனம் மீது மோதியதில், செல்வம் உள்ளிட்ட நால்வரும் பலத்த காயமடைந்தனர். நான்கு பேரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தன்ராஜ், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X