பொது செய்தி

இந்தியா

உழவர்கரை நகராட்சி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement
 உழவர்கரை நகராட்சி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி:கொட்டுப்பாளையத்தில் நடந்த வேலைவாய்ப்பு நேர்காணலில், ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாததால், 12 பேர் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட கொட்டுப்பாளையம் நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில், நகர வாழ்வாதார மையம் புதிதாக திறக்கப் பட்டுள்ளது.இதையொட்டி, உழவர்கரை நகராட்சி மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் டெக் மஹேந்திரா நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் கந்தசாமி, நேர்காணலை துவக்கி வைத்தார். காலை 9.௦௦ மணி முதல் மாலை 3.௦௦ மணி வரை நடைபெற்ற முகாமில், பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத, 200 பேர் பங்கேற்றனர்.இறுதியில், 12 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், சென்னை டெக் மஹேந்திரா நிறுவனத்தின் தொலைத்தொடர்பு செயல்பாட்டின் வாடிக்கையாளர் சேவை பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.50 பேர் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், ஆங்கிலம் சரளமாக பேச தெரியாததால் பலர் நிராகரிக்கப்பட்டு, 12 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர்கண்ணன் சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X