பொது செய்தி

தமிழ்நாடு

பணி இன்றி ஓய்வெடுக்கும் அறுவடை இயந்திரங்கள்,

Added : பிப் 13, 2020
Advertisement
 பணி இன்றி ஓய்வெடுக்கும் அறுவடை  இயந்திரங்கள்,

பொன்னேரி:சம்பா அறுவடை பணிகளுக்கு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த இயந்திரங்கள், பணிகள் இல்லாமல் சாலையோரங்களில் ஓய்வெடுத்து வருகின்றன.

மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்காக, நெல் பயிரிடப்பட்டு, இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்வர்.இதில், பெல்ட் மற்றும் டயர் என, இரண்டு வகையாக அறுவடை இயந்திரங்கள் அறுவடைக்கு பயன்படுத்தப்படும்.'பெல்ட்' இயந்திரங்களில் அறுவடை செய்யும்போது, வைக்கோல் துாள் துாளாகி கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

அதேசமயம், 'டயர்' இயந்திரங்களில் அறுவடை செய்யும்போது, வைக்கோல் வீணாகாமல் கிடைக்கும்.மாடு வைத்திருப்பவர்கள், டயர் இயந்திரங்களையே விரும்புவர். இதற்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, ஆண்டுதோறும், 100க்கும் மேற்பட்ட டயர் அறுவடை இயந்திரங்கள், கோளூர், அகரம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முகாமிட்டு, அறுவடை பணிகளை மேற்கொள்ளுவர்.

இந்த ஆண்டு, மீஞ்சூர் ஒன்றியத்தில், அறுவடைக்கு சில நாட்களுக்கு முன், புகையான் நோய் பாதிப்பால், நெற்பயிர்கள் பாதித்தன. காய்ந்து கருகிய நெற்பயிர்களை, விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டனர்.வழக்கம்போல், இந்த ஆண்டு அறுவடை பணிகளுக்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்த வந்த டயர் இயந்திரங்கள் பணிகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தன.

பணிகள் ஏதுமின்றி, தேவம்பட்டு, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் ஒய்வெடுத்து வருகின்றன. அடுத்த இரண்டு மாதங்களில், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கும் என்பதால், மீண்டும் ஊர் திரும்ப உள்ளதாக, இயந்திர உரிமையாளர் கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X