சேதமடைந்த எறையாமங்கலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

Added : பிப் 13, 2020
Advertisement
 சேதமடைந்த எறையாமங்கலம் சாலை:  வாகன ஓட்டிகள் அவதி

எறையாமங்கலம்:எறையாமங்கலம் பகுதியில், சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியிலிருந்து, எறையாமங்கலம், நுங்கம்பாக்கம், மேல்நல்லாத்துார் வழியாக மணவாள நகர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலை வழியே, அரசு பஸ், தனியார் தொழிற்சாலை பஸ், ஷேர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் என, தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையில், கம்மவார்பாளையம் முதல், மப்பேடு வரை உள்ள நெடுஞ்சாலையில், ஆங்காங்கே பல இடங்களில், கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எறையாமங்கலம் ஏரிக்கரை அருகே, தார்சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாகன ஓட்டிகள் அவதி


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X