பொது செய்தி

இந்தியா

காரைக்கால், பாகூர் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு: புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:பாகூர் மற்றும் காரைக்கால் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி சட்டபை சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.
இதில், காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின், அறிவிக்கையை திரும்ப பெற கோருதல் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப் பட்டது.
வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க, தனியார் நிறுவனத்துடன் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் கடந்த ஆண்டு ஜூலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி தேவையில்லை என, சட்டவிதிகளை திருத்தி அறிவிக்கை வெளியிட்டது.இச்சட்ட திருத்தம் குறித்த கருத்துக்களை கூற சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. எனவே, மத்திய அரசின் இந்த திட்ட அறிவிப்பு ஒருதலைபட்சமானது.காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது, அம்மாவட்டத்தை பாலைவனமாக்கும் செயல் மட்டுமின்றி, விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் செயலாகும்.காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேச விவசாய மண்டலமாக விளங்குகிறது. காவிரி கடைமடை பாசன பகுதியாக இருப்பதால், காவிரி மேலாண்மை ஆணையம் புதுச்சேரிக்கு ஒதுக்கியுள்ள 7 டி.எம்.சி., தண்ணீரை பிரித்து அளிக்க ஆணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.எனவே, காரைக்கால் மாவட்டத்தில் விவசாய பாதுகாப்பு, விவசாய பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தவும், விவசாயம் சார்ந்த தொழில்களை வளர்க்கவும் காகை்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான தேவை உருவாகியுள்ளது. எனவே, காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, நலத்துறை அமைச்சர் கந்தசாமி எழுந்து, பாகூரையும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.அதையேற்ற அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரியின் நெற்களஞ்சியமாக திகழும் பாகூரையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, பாகூரையும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கிறேன்' என தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், 'கடந்த மாதம் 16ம் தேதியிட்ட மத்திய சுற்றுசசூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அறிவிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என குறிப்பிட்டார்.இத்தீர்மானத்தை ஆதரித்து, முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவா, வெங்கடேசன், கீதாஆனந்தன், காங். எம்.எல்.ஏ., அனந்தராமன் உள்ளிட்டோர் பேசினர். அதையடுத்து, குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியதாக, சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
13-பிப்-202013:53:44 IST Report Abuse
R. Vidya Sagar ஸ்டாலின் இப்பொழுது என்ன சொல்லப்போகிறார். மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு முதல்வரை கேலி செய்தாரே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X