பொது செய்தி

தமிழ்நாடு

வீரகநல்லுார் இருளர் காலனியில் அதிகாரிகள், 'விசிட்'

Added : பிப் 13, 2020
Advertisement

திருத்தணி:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஒன்றியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், இருளர் காலனிக்கு சென்று, குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளை நேற்று மேற்கொண்டனர்.
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சியில், பகத்சிங் நகர் இருளர் காலனியில், 65 குடும்பத்தினர் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு, குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, திருத்தணி ஒன்றிய குழு துணைத் தலைவர் ரவி, வீரகநல்லுார் ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்பாபு, ரேணுகா, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் உட்பட துறை அதிகாரிகள் நேற்று, பகத்சிங் நகர் இருளர் காலனிக்கு சென்றனர்.

அங்குள்ள இருளர்களிடம் குறைகளை கேட்டறிந்து, முதற்கட்டமாக குடிநீர் வசதி ஏற்படுத்த, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும் தீர்மானித்து, மக்களிடம் உறுதி அளித்தனர்.இன்று, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, இரு நாட்களில் முக்கியமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என, இரு துறை அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X