இந்தியா

தீர்மானம்! குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக... என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., புறக்கணிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 தீர்மானம்!  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக... என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., புறக்கணிப்பு

புதுச்சேரி:குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
.புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம், நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கியது. ஆளுங்கட்சி தரப்பில் காங்., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சபைக்கு வந்திருந்தனர். அதேசமயம், பிரதான எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வராமல் புறக்கணித்தனர். இதனால், எதிர்க்கட்சி வரிசை வெறிச்சோடி காணப்பட்டது.எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் மட்டும் வந்திருந்தனர்.
சபை துவங்கியவுடன், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற அரசு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதை கண்டித்து கோஷமிட்டனர்.அமைச்சர் கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் எழுந்து பா.ஜ.,வினருடன் நேருக்கு நேராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, அரசு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மூவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின், முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த அரசு தீர்மானம் வருமாறு:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையாக திகழ்வது மதச்சார்பின்மையாகும். அதனை சிதைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் அமைந்துள்ளது. இந்த சட்டம், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதுடன், நேர்மையான மற்றும் சுதந்திரமான ஜனநாயகத்திற்கு எதிரானதாகவும் உள்ளது.தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை கொண்டு வந்து குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, அரசு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் பாலன், அரசு கொறடா அனந்தராமன், காங்., எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, ஜான்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன், சுயேச்சை எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.தொடர்ந்து, தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக, சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X