பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு: ஜனாதிபதியிடம் புகார் தெரிவிப்போம் என ஆவேசம்

Added : பிப் 13, 2020
Advertisement
 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு: ஜனாதிபதியிடம் புகார் தெரிவிப்போம் என ஆவேசம்

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர, முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எழுந்து நின்று, 'தீர்மானம் நிறைவேற்றக்கூடாது' என, கோஷம் எழுப்பினர்.
பின்னர், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து, வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறியதாவது:பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை எதிர்க்க யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு அதிகாரம் இல்லை.நாடு முழுவதும் 78 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இச்சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டசபையில், முதல்வரும் சபாநாயகரும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஜனாதிபதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய இருவர் மீதும், ஜனாதிபதியுிடம் புகார் தெரிவிக்கப்படும்.
மேலும், இச்சட்டத்தால் புதுச்சேரியில் 1 சதவீதம் கூட பாதிப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் யாரும் இல்லாமல், காங்., செயற்குழு கூட்டம் போல், சட்டசபை கூட்டத்தை நடத்துகின்றனர்.புதுச்சேரியில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளது. ஏழை மக்களுக்கு அரிசி வழங்கவில்லை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதற்காக சட்டசபையை கூட்டாமல், சோனியா, ஸ்டாலினை திருப்திபடுத்த சட்டசபையை கூட்டி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X