பொது செய்தி

இந்தியா

அனுமதி பெறாத குடிநீர் இணைப்பு உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள், உரிய முறையில் விண்ணப்பித்து, முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரும்பார்த்தபுரம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, ஆலங்குப்பம் உள்ளிட்ட வார்டுகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வார்டுகளில் பல குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், பல குடியிருப்புகள் நகராட்சியின் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள்ளனர். இந்த வார்டுகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள், அதை முறைப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் உரிய வகையில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் இணைப்பினை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அபராதம், இணைப்பு துண்டித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள் உழவர்கரை நகராட்சி அலுவலகத்திலும் மற்றும் www.oulmun.in என்ற இணையதளத்திலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறினால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X