பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' விளையாட்டு மைதானம் முட்புதர்கள் அகற்றும் பணி

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 'அம்மா' விளையாட்டு மைதானம் முட்புதர்கள் அகற்றும் பணி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகளிலும், 'அம்மா' விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளிலும், 'அம்மா' விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் லதா கூறியதாவது:ஊராட்சி பகுதியில், விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, ஊராட்சி பகுதிகளில், 4,000 சதுர அடி தேர்வு செய்யப்பட்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 'அம்மா' விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இளைஞர்களிடம் கிரிக்கெட், கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த விளையாட்டு மைதானம் தயார் செய்யப்படும்.

இதன் முதற்கட்டமாக, கடம்பத்துார் ஒன்றியம், கொண்டஞ்சேரி ஊராட்சியில், 'அம்மா' விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்டு, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதேபோல், இளைஞர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கும் வகையில், 43 ஊராட்சிகளிலும், 'அம்மா' விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
14-பிப்-202021:54:03 IST Report Abuse
Ramesh M வாழ்த்துக்கள். நல்ல திட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X