கிரண்பேடி வெளியேற வேண்டும் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement
புதுச்சேரி:'அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும்' என, முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அவர் பேசியது:புதுச்சேரியில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக கவர்னர் கிரண்பேடி இருந்து வருகிறார். சுற்றுலா வளர்ச்சி பெறவில்லை, மக்களுக்கு அரிசி

புதுச்சேரி:'அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும்' என, முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அவர் பேசியது:புதுச்சேரியில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக கவர்னர் கிரண்பேடி இருந்து வருகிறார். சுற்றுலா வளர்ச்சி பெறவில்லை, மக்களுக்கு அரிசி கிடைக்கவில்லை, வேலை வாய்ப்பு பிரச்னை, அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கவில்லை. இவற்றை அரசு செய்ய முயன்றாலும் அனுமதி தருவதில்லை. தடுத்து நிறுத்துகிறார். ஆட்சியாளர்கள் அவரை சந்தித்து பேசியும் பயனில்லை.புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்படக் கூடாது, அமைச்சரவைக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் மரியாதை இருக்க கூடாது என்பதில் கவர்னர் உறுதியாக உள்ளார்.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்களின் கடமை, அந்த வேலையை நாங்கள் செய்து வருகிறோம். கவர்னரை எதிர்த்து ஆட்சியாளர்கள் கோர்ட்டுக்கு சென்றது வேறெங்கும் நடந்ததில்லை.அரிசி போட வேண்டும் என நானும், தேர்தல் ஆணையர் நியமன விஷயத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிகார பிரச்னை தொடர்பாக முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணனும் கவர்னருக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.புதுச்சேரி மக்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். தற்போது, விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தை தடுத்து நிறுத்திவிட்டார். மக்கள் விரோத செயலில் ஈடுபடும் கவர்னர் கிரண்பேடி புதுச்சேரிக்கு தேவையா, அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவராகவே வெளியேற வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X