கவர்னர் எழுதிய கடிதத்தை பிரித்து படிக்காத முதல்வர்| Dinamalar

கவர்னர் எழுதிய கடிதத்தை பிரித்து படிக்காத முதல்வர்

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
புதுச்சேரி:'கவர்னர் எழுதிய கடிதத்தை பிரித்து படிக்கவில்லை' என முதல்வர் நாராயணசாமிதெரிவித்தார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பேசிக் கொண்டிருந்தார். அப்போது, முதல்வர் நாராயணசாமி குறுக்கிட்டு பேசும்போது, 'கடிதம் ஒன்றை கவர்னர் அனுப்பினார். அந்த கடிதத்தை இன்னும் பிரிக்கவில்லை. சபையில்தான் பிரிக்க

புதுச்சேரி:'கவர்னர் எழுதிய கடிதத்தை பிரித்து படிக்கவில்லை' என முதல்வர் நாராயணசாமிதெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பேசிக் கொண்டிருந்தார். அப்போது, முதல்வர் நாராயணசாமி குறுக்கிட்டு பேசும்போது, 'கடிதம் ஒன்றை கவர்னர் அனுப்பினார். அந்த கடிதத்தை இன்னும் பிரிக்கவில்லை. சபையில்தான் பிரிக்க போகிறேன்.(சபையில் கடிதத்தை பிரித்து காண்பித்தார்) ஆனால், எனக்கு கவர்னர் எழுதிய கடிதம் வாட்ஸ் ஆப், டிவிட்டரில் வந்து விட்டது.முதல்வருக்கு 'கான்பிடென்ஷியல்' என்ற முறையில் ரகசியமாக அனுப்பிய கடிதத்தை, பத்திரிகையில் தருவது, வாட்ஸ் ஆப், டிவிட்டரில் கவர்னர் போடுவது விதிமுறைக்கு உட்பட்டதா? இது, விதி மீறிய செயலாகும்.உயர் பதவியில் உள்ளவர்கள் கண்ணியத்தை காக்க வேண்டும்.தான் வகிக்கும் பதவிக்கு அவர் இழுக்கு விளைவிக்கிறார். அந்த பதவிக்கு அவர் தகுதியில்லாதவர் என்பதை நிரூபித்துள்ளார்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X