பொது செய்தி

தமிழ்நாடு

பேரண்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement
 பேரண்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், பேரண்டூர் கிராமத்தில் உள்ள ஏரி, குடிமராமத்துப் பணி மூலம், 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கரைகளை பலப்படுத்துதல், கலங்கல், மதகுகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வந்தன.

ஏரிக்கரை பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, 31 குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். குடிமராமத்து பணி மூலம் அவர்களை அங்கிருந்து அகற்றி, மாற்று இடம் வழங்க, வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்தது. மொத்தமுள்ள, 31 குடும்பத்தினருக்கு, அதே கிராமத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டது.

நேற்று, ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற, பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் பிரிதிவி பாலசுப்ரமணியம் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் காதர்பர்வீன், வருவாய் ஆய்வாளர் யுகேந்தர் ஆகியோர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் குடிசைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, எல்லாபுரம் ஒன்றியக் குழு தலைவர் ரமேஷ் வந்த போது, பொதுமக்கள் அவரிடம், வீடுகளில் உள்ள பொருட்களை எடுக்க அவகாசம் கேட்டனர்.

ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, வீடுகளில் இருந்து தேவையான பொருட்களை எடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X