பொது செய்தி

தமிழ்நாடு

மானிய விலையில் வேர்க்கடலை கேழ்வரகு விவசாயிகளுக்கு அழைப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

திருத்தணி:விவசாயிகளுக்கு, வேர்க்கடலை, கேழ்வரகு போன்ற விதைகள் மானிய விலையில் பெறுவதற்கு, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருத்தணி ஒன்றியத்தில், விவசாயிகள், நெல், கரும்பு, வேர்க்கடலை, கேழ்வரகு, உளுந்து போன்ற பயறு வகைகள் பயிரிடுவதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, விவசாயிகள் நலன் கருதி, வேளாண் துறையின் மூலம், வேர்க்கடலை, கேழ்வரகு, உளுந்து, பச்சைப்பயறு போன்ற விதைகள், மானிய விலையில் வழங்கி வருகின்றன.

இது குறித்து, திருத்தணி, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேர்க்கடலை மற்றும் கேழ்வரகு பயிரிடும் விவசாயிகள் நலன் கருதி, 40 கிலோ எடை வேர்க்கடலை கொண்ட மூட்டை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ, வேர்க்கடலை மொத்த விலை, 94.20 ரூபாய், இதில், மானியம், 36 ரூபாய் போக, 58.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல், கேழ்வரகு, 5 கிலோ எடை கொண்ட பை விற்கப்படுகிறது. ஒரு கிலோவின், மொத்த விலை, 61.30 ரூபாய், இதில், மானியம், 30 ரூபாய் போக, 31.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, வேர்க்கடலை, 1,260 கிலோவும், கேழ்வரகு, 110 கிலோவும் இருப்பு உள்ளது. விவசாயிகள் மானிய விலையில் விதைகள் பெற, ஆதார் கார்டு, நிலத்தின் சிட்டா, மொபைல் போன் எண் ஆகியவற்றுடன், திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை பகுதிகளில் செயல்பட்டு வரும் வேளாண் விற்பனை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X