உலக மொபைல் போன் மாநாடு :'கொரோனா'பீதியால் ரத்து

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020
Advertisement
உலக மொபைல் போன் மாநாடு :'கொரோனா'பீதியால்  ரத்து

பார்சிலோனா: 'கொரோனா' வைரஸ் பீதியால் உலக மொபைல் போன் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா ' என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி இன்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் இந்த கொடிய வைரஸ் நோய் தாக்கி இதுவரை 1,100 பேர்பலியாகியுள்ளனர்.இதையடுத்து இம்மாதம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடக்கவுள்ள உலக மொபைல் போன் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




இது தொடர்பாக ஜி.எஸ்.எம்.ஏ. என்ற அமைப்பு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வரும் 24-ம் தேதி துவங்கி பிப்.27-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இம்மாநாட்டின் போது நடக்கும் மெகா கண்காட்சி நிகழ்ச்சியில், உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தினை கொண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளன.
மேலும் புதிதாக வெளியாகும் போன்கள் குறித்த அறிமுகங்களை நிறுவனங்கள் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆண்டு தோறும் நடக்கும் இம்மாநாடு ,சீனாவில் 'கோவிட்-19 எனப்படும் 'கொரோனா' வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து மாநாடு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X