ஜி.எஸ்.டி., வரி நடைமுறைகளை எளிமையாக்க சட்டசபையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:வணிகர்கள் ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக, சட்டசபையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி சட்டசபையில், புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட திருத்த மசோதாக்களை நேற்று தாக்கல் செய்து, முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் வணிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் எளிமையான புதிய ரிடர்ன் படிவம் அறிமுகப்படுத்தவும், எளிமைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தவும் ஜி.எஸ்.டி., வரி சட்டத்தில் திருத்தங்களை செய்வது என,ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி, புதுச்சேரி ஜி.எஸ்.டி., வரி சட்டத்தில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட உள்ளது.பதிவு பெற்ற நபர்கள் மற்றும் பதிவு வேண்டி விண்ணப்பிப்போர் ஆதார் சமர்ப்பித்தல் அல்லது உறுதி செய்தல் கட்டாயமாக்கப்படும். ஆதார் இல்லாதவர்களுக்கு மாற்று வழிவகைகள் செய்யப்படும். இதன் மூலம், போலி பதிவு பெறுதல் மற்றும் வரி ஏய்ப்பு தடுக்கப்படும்.புதிய எளிமைப்படுத்தப்பட்ட ரிடர்ன் சமர்ப்பித்தலை அறிமுகப்படுத்த சட்டத்தில் வழிவகை செய்யப்படும். இந்த வசதி, அரசு அறிவிக்கை மூலமாக அறிவிக்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.சப்ளையர் அவரது சரக்குகள் மற்றும் சேவையை பெறுபவருக்கு மின்னணு முறையில் பணம் செலுத்தும் 'டிஜிட்டல் பேமெண்ட்' வசதி ஏற்படுத்தி தரப்படும்.தற்போது, மின்னணு தொகை பதிவேட்டில் தவறான தலைப்பில் பணத்தை செலுத்திவிட்டால், வணிகர்கள் மீண்டும் சரியான தலைப்பில் பணம் செலுத்த வேண்டும். தவறான தலைப்பில் செலுத்தப்பட்ட பணத்தை ரீபண்டு பெறலாம். இதனால், வணிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, ஒரு தலைப்பில் செலுத்தப்பட்ட பணத்தை, மற்றொரு தலைப்பிற்கு வணிகர்களே மாற்றிக் கொள்ள சட்ட திருத்தத்தின் மூலம் வழிவகை செய்யப்படும்.காலதாமதமாக ரிடர்ன் சமர்ப்பித்தால், மொத்த வரி மீது வட்டி செலுத்த வேண்டும். தற்போது செய்யப்படும் திருத்தத்தால், வணிகர்கள் பணமாக செலுத்தும் வரி மீது மட்டும் வட்டி செலுத்த வேண்டும். உள்ளீட்டு வரியை உபயோகித்து செலுத்தப்படும் வரி மீது வட்டி செலுத்த தேவையிராது. இதனால், வணிகர்கள் மிகவும் பயனடைவர். இந்த வசதி அரசு அறிவிக்கை மூலமாக அறிவிக்கும் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும்.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட 'மாநில முன்வழங்கு தீர்ப்பு முறையீட்டு அதிகார அமைப்பு' வழங்கும் முரண்பாடான தீர்ப்பை எதிர்த்து, தேசிய அதிகார அமைப்பில் முறையீடு செய்யலாம். இந்த வசதி அரசு அறிவிக்கை மூலமாக அறிவிக்கும் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக, சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X