சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ., விளக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:'அரசியல் ஆதாயத்திற்காக சிறப்பு சட்டசபையை முதல்வர் கூட்டியதால் புறக்கணித்தோம்' என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரிக்கு மத்திய அரசு, 2020-2021ம் ஆண்டிற்கு ரூ. 1703 கோடி நிதி அளித்துள்ளது. இதைவைத்து, காலத்தோடு முழு பட்ஜெட் சமர்ப்பிக்கலாம். ஆனால் அதற்கான நடவடிக்கையை ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. அதேசமயம் அரசியல் ஆதாயத்திற்காக சிறப்பு சட்டசபையை முதல்வர் நாராயணசாமி கூட்டினார். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த காங்., அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அரசு துறைகளில் காலியாக உள்ள 9500 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு 40 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்கு போதிய நிதி ஒதுக்கியும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் புதுச்சேரியில் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. இதனால் மாநிலம் முழுவதும் சிறிய வர்த்தக நிறுவனங்கள், ஆலைகள் மூடப்பட்டு வருகிறது.சிறப்புக்கூறு நிதி வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகத்தை அரசு செய்து வருகிறது. எனவே, மக்களுக்கான நிறைய பிரச்னைகளை தீர்க்காமல், அரசியல் ஆதாயத்திற்காக சிறப்பு சட்டசபை கூட்டப்பட்டதால் பங்கேற்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X