செய்தி சில வரிகளில்...காஞ்சிபுரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...காஞ்சிபுரம்

Added : பிப் 13, 2020
Share

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பண்ரூட்டி: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பண்ரூட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.மாவட்ட குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் சக்திவேல் பங்கேற்று, மாணவர்களுக்கான உரிமைகள், கடமைகள், கேலிவதை சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காண்டீபன், ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

புதிய சி.இ.ஓ., பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, முதன்மை கல்வி அலுவலராக ஆஞ்சலோ இருதயசாமி பணிபுரிந்து வந்தார். அவர், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, பணி மாறுதலில் சென்றார்.அவருக்கு பதிலாக, தேவக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த, சத்தியமூர்த்தி பதவி உயர்வு பெற்று, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, நேற்று பொறுப்பேற்றார்.

தைப்பூச பெருவிழா நிறைவு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தைப்பூச பெருவிழா, ஜனவரி, 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.பிரபல உற்சவமான, பெருநகர் செய்யாற்றில், 20 ஊர் சுவாமிகள் எழுந்தருளும் தைப்பூச தரிசனம், 9ம் தேதி அதிகாலை நடந்தது. நேற்று காலை, திருமுறை திருவிழாவுடன், தைப்பூச விழா நிறைவு பெற்றது.

கால்நடை தொட்டி சீரமைப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், ராவுத்தநல்லுார் கண்டிகையில், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக, 20 ஆயிரம் ரூபாய் கட்டப்பட்டது.இந்த கால்நடை குடிநீர் தொட்டி, பல மாதங்களாக பராமரிப்பு இல்லாததால், பாசி படர்ந்து தண்ணீர் பச்சை நிறமாக இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், கால்நடை தொட்டியில் படர்ந்திருந்த பாசிகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X