பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்... திருவள்ளூர்

Added : பிப் 13, 2020
Advertisement

மஹா சம்ப்ரோக்ஷணம்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில், சந்தான வேணுகோபால பார்த்தசாரதி கோவிலில், மஹா சம்ப்ரோக்ஷண விழா, நேற்று நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், கடந்த, 10ம் தேதி, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று, காலை, 6:00 மணிக்கு, கலச ஊர்வலம் நடந்தது. காலை, 6:30 மணி முதல், 7:00 மணி வரை, கலசநீர் ஊற்றி, மஹா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.பின், கலச நீரை பக்தர்கள் மீது தெளித்தனர். அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில், லட்சுமி நரசிம்மர். ராமசந்தர மூர்த்தி, சுந்தர வதன சீதா ராமர் ஆகிய சன்னிதிகளில், கலசநீர் ஊற்றி பூஜைகள் நடத்தப்பட்டன.காலை, 9:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X