சட்டசபை துளிகள்

Added : பிப் 13, 2020
Advertisement

தாமதமான துவக்கம்
புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 10 நிமிடங்கள் தாமதமாக 9:40 மணிக்கு துவங்கியது.மீண்டும் ஜான்குமார்கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை பொது தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து ஜான்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு வந்தார். பின், முதல்வர் நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில், காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜான்குமார் நேற்று பங்கேற்றார். ஆளுங்கட்சி வரிசையில் ஜெயமூர்த்திக்கு அடுத்ததாக ஜான்குமாருக்கு சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது.தனவேலு பங்கேற்புகாங்., எம்.எல்.ஏ., தனவேலு, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, காங்., கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தனவேலு நேற்று சட்டசபைக்கு வந்திருந்தார். ஆளுங்கட்சி வரிசையில் ஏற்கனவே அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து சபை அலுவல்களில் பங்கேற்றார். இருந்தபோதும், எந்த விவாதத்திலும் பேசவில்லை.
அரசியல் நாகரீகம்
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் முன்னதாகவே வந்து சபையில் அமர்ந்திருந்தனர். பின், காங்., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் சபைக்கு வந்தனர். சபைக்குள் வந்த முதல்வரும், அமைச்சர்கள் சிலரும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுடன் புன்சிரிப்புடன் கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
குடும்பத்தினர் வருகை
சட்டசபையில் உள்ள பார்வையாளர் மாடத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசனின் மனைவியும், மகளும் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்வையிட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசி முடித்தவுடன், அவரது குடும்பத்தினர் புறப்பட்டு சென்றனர்.
சபை ஒத்திவைப்பு
காலை 9:40 மணிக்கு துவங்கிய சிறப்பு கூட்டம், மதியம் 2:50 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் சபையின் அலுவல்கள் நடந்தது. இதைதொடர்ந்து, சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக, சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X