இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டும்: சட்டசபையில் தீர்மானம்

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 'இந்திய அரசியலமைப்பு சட்டம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு என்பதை உறுதி செய்துள்ளது.சமூக நீதிக்கு எதிராக சில சக்திகள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ரத்து செய்தார்கள். இது தொடர்பாக உத்ரகண்ட் மாநில மேல் முறையீட்டிலும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்' என, பேசினார்.அதேபோன்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்ட நாளான நவ., 26ம் தேதியை நாம் அரசியலமைப்பு சட்ட நாளாக கொண்டாடி வருகிறோம். 70வது இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்விழா கொண்டாடும் இத்தருணத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பற்ற தன்மையை சிதைக்க நினைக்கும் மத்திய பா.ஜ., அரசின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற தீர்மானத்தையும் முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார்.
இரு தீர்மானங்கள் மீதும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்து பேசினர். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானங்களை சபாநாயகர் சிவக்கொழுந்து நிறைவேற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X