பட்டாணி கடையில் தீ விபத்து

Added : பிப் 13, 2020
Advertisement
 பட்டாணி கடையில் தீ விபத்து

பாகூர்:கிருமாம்பாக்கத்தில் பட்டாணி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
பாகூர் அடுத்த ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் தமிழரசன், 40; இவருக்கு சொந்தமான பட்டாணி கடை, கிருமாம்பாக்கத்தில் உள்ளது. இக்கடையை, தமிழரசனின் மைத்துனர், வில்லியனுார் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த கணபதி,35; என்பவர் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை கணபதி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில், பட்டாணி கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.தீ விபத்தில், கடையில் இருந்த பட்டாணி, கொண்டை கடலை, மணிலா உள்ளிட்ட 3.50 லட்சம் ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. பட்டாணி கடைக்கு பக்கத்தில் உள்ள டீக்கடையில் இருந்த சில பொருட்களும், அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தின் ஏ.சி.,யும் தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X