சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 13, 2020
Advertisement

பைக் தீ வைத்து எரிப்பு

வெங்கல்: வெங்கல் அடுத்த, சிங்கிலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன்,30. இவரது ஹோண்டா சைன் இருசக்கர வாகனத்தை, தன் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். காலையில், பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர்கள், அவரது இருசக்கர வாகனத்தை, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

சோழவரம்: சோழவரம், செங்காளம்மன் கோவில் பின்புறம், கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், சோழவரம் போலீசார், திடீர் சோதனையிட்டனர். அங்கு, கஞ்சா விற்பனை செய்தவரை, பிடித்து விசாரித்தபோது, சோழவரம், ராமன் மகன் ஸ்டாலின், 19, என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

வாலிபர் தற்கொலை

வெங்கல்: வெங்கல் அடுத்த, சோம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜேந்திரன் மகன் சதீஷ், 23. இவர், கடந்த, 3ம் தேதி, மேலகொண்டையூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். காது வலி அதிகமாக இருந்ததால், மனமுடைந்த சதீஷ், வீட்டில் இருந்த, விஷத்தை குடித்து விட்டார். இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

4 வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர்: வெங்கல் போலீசார், நேற்று முன்தினம், வெள்ளியூர் கொசஸ்தலை ஆறு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்த, அதே பகுதியைச் சேர்ந்த, பிரவீண்குமார், 19 என்பவரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.சோழவரம் போலீசார், நடத்திய வாகன சோதனையில், சோத்துபெரும்பேடு பகுதியில், மணல் கடத்தி வந்த, மூன்று மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த, மூன்று பேரை கைது செய்தனர். மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X