சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: காஞ்சிபுரம்

Added : பிப் 13, 2020
Advertisement


கோவில் ஊழியர் விபத்தில் பலி

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், சேதுராயர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 56. வரதராஜ பெருமாள் கோவிலில், நாதஸ்வரம் வாசிக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, செட்டி தெரு வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, கல்பாக்கத்தில் இருந்து வேலுார் சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த சண்முகம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, , நேற்று காலை அவர் இறந்தார்.

வேன் மோதி வாலிபர் இறப்பு

மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த, சிட்டிலம்பாக்கத்தைச் சேர்ந்த, ஏகாம்பரம் மகன் அசோக்குமார், 25. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, புதுப்பட்டினத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். விட்டிலாபுரம் அருகே, முன்னால் சென்ற வேனில் மோதி, காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில், அசோக்குமார் இறந்தார். சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆறு பேர் மாயம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 17 வயதுடைய சிறுமி, உத்திரமேரூரில் உள்ள தனியார் கலை கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த, 10ம் தேதி காலை, கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரை, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், ஐந்து பேர் மாயமானதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.பெரியபாளையம் அடுத்த, வேளகாபுரத்தைச் சேர்ந்தவர், மேகனன்மூர்த்தி மகள், மனோரஞ்சனி, 20. கடந்த, 10ம் தேதி, வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.

திருத்தணி, சிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் மனைவி சத்யா, 25, கடந்த, 6ம் தேதி முதல், காணவில்லை.ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணாகுப்பம் மேடு மற்றும் பொன்னேரி, மேல்சிட்ரம்பாக்கத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுவர் இருவரையும், கடந்த, 7 மற்றும், 10ம் தேதி முதல் ,காணவில்லை.மீஞ்சூர், வழுதிகைமேடு பகுதியில், உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்த, பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமணன் ராணா, 35, கடந்த, 2ம் தேதி முதல் காணவில்லை. இச்சம்பவங்கள் குறித்து, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கார் மோதல்: வாலிபர் மரணம்

வண்டலுார்: சென்னை, பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் சாலமன்ராஜா, 29. இவர், நேற்று முன்தினம், தன், 'பேஷன் புரோ' இருசக்கர வாகனத்தில், நண்பர் அருணாசலம், 30, என்பவருடன், வண்டலுார் சென்றார்.வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்ற போது, எதிரே, சோதனை ஓட்டத்திற்கு எடுத்து வரப்பட்ட புதிய கார் மீது மோதியது.இதில், சாலமன்ராஜா, அதே இடத்தில் இறந்தார். அருணாச்சலத்தை மீட்ட போலீசார், '108' ஆம்புலன்ஸ் சேவை வாகனம் மூலம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X