கல்விக் கட்டண உயர்வை திரும்ப பெற ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:கல்விக் கட்டண உயர்வை, புதுச்சேரி பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது:பல்கலைக் கழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கல்விக் கட்டண உயர்வு மாணவர்களை கோபமடையச் செய்திருப்பதுடன், பல்கலைக்கழக வளாகத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு 225 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.அதேபோல, எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்.டபிள்யூ., உள்ளிட்ட படிப்புகளுக்கும் 10,000 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவு பாழாக்கப்படும்.சமத்துவம், சமூக பொறுப்புணர்வு ஆகியவை பல்கலைக் கழகத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, கல்விக்கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று, ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X