பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் சத்துணவு தயாரிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

ஆர்.கே.பேட்டை:அரசு பள்ளியில் மாணவர்கள் பயிரிட்ட காய்கறியில், சத்துணவு தயாரித்து பரிமாறப்பட்டது. உழைப்பின் பலனை மாணவர்கள் ருசித்து அனுபவித்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளி வளாகத்தில், மாணவர்கள், அவரை தோட்டத்தை பராமரித்து வருகின்றனர்.ஆறு மாத வளர்ச்சியை எட்டிய கொடியில், தற்போது, காய் காய்த்துள்ளது. முதல் அறுவடையை நேற்று நடத்திய ஆசிரியர்கள், மூன்று கிலோ அளவிலான காய்களை, அதே பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும், சத்துணவு மையத்திற்கு வழங்கினர்.மாணவர்களின் பராமரிப்பில் வளர்க்கப்பட்ட தோட்டத்தில் விளைந்த காய்கறி, நேற்று சத்துணவு தயாரிக்க பயன்படுத்தி கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X