பொது செய்தி

இந்தியா

கட்டடத் தொழிலாளர் பிரச்னைகள் புதுச்சேரியில் 2 நாள் பயிலரங்கம்

Added : பிப் 13, 2020
Advertisement
 கட்டடத் தொழிலாளர் பிரச்னைகள் புதுச்சேரியில் 2 நாள் பயிலரங்கம்

புதுச்சேரி:அகில இந்திய கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மகா சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், இரண்டு நாள் பயிலரங்கம் புதுச்சேரியில் நேற்று துவங்கியது.
எல்லப்பிள்ளைச்சாவடி சித்தானந்தாநகர் ஓட்டல் நவரத்தினாவில் துவங்கிய பயிலரங்கை, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.சிறப்பு அமர்வில், கட்டுமான துறையின் நவீன போக்குகள் குறித்து உன்னிகிருஷ்ணன் கலந்துரையாடினார்.தொழிலாளர் சட்டம் குறித்து மூர்த்தி, கட்டுமான துறையில் வேலை வாய்ப்புகள் குறித்து வித்யாசாகர், பாலின சமத்துவம் குறித்து வகிதா நிசாம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.ஏ.ஐ.டி.யு.சி., செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம், கட்டடக்கலை தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஞானவேல், கவுரவ தலைவர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பயிரலங்கில் இந்தியா முழுவதும் இருந்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று கட்டுமான தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X