குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., கேள்வி

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதில், தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., தெரிவிக்க வேண்டும் என தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தி.மு.க., தெற்கு மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கை:மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டசபையில் காங்., - தி.மு.க. கூட்டணி அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. சட்டசபை என்பது, மக்கள் பிரதிநிதிகளின் வாதம், பிரதிவாதத்தில் எது சரியானது என்பதை முடிவு செய்யும் இடம். அங்கு, அரசு தீர்மானத்தை முன்மொழியும்போது, அதை ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்துக்களை தெரிவிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.நேற்றைய சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்., மற்றும் அ.தி.மு.க., பங்கேற்கவில்லை. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த இக்கட்சிகள் பா.ஜ. கூட்டணியில் உள்ளதா, புதுச்சேரி அரசின் முடிவை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X