பொது செய்தி

இந்தியா

வங்கியால் அடித்தட்டு மக்கள் பயன்பெற வேண்டும்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (22)
Advertisement
வங்கி,அடித்தட்டு மக்கள்,ஜனாதிபதி #

புனே: ''வங்கி வாசமே அறியாத ஏராளமானோருக்கு கணக்கு துவக்கி அவர்களை அமைப்பு சார்ந்த நிதி துறையில் இணைத்த வங்கிகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது'' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.மஹராஷ்டிர மாநிலம் புனேவில் தேசிய வங்கி மேலாண்மை மையத்தின் பொன்விழாவில் அவர் பேசியதாவது:

ஏழைகளின் ஒட்டுமொத்த பொருளாதார வலிமையை சார்ந்து தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் உள்ளது. அதனால் வங்கிச் சேவை பெறாத குடிமகனே இல்லை என்ற நிலையை வங்கிகள் ஏற்படுத்த வேண்டும்.வங்கிகளின் சிறப்பான முயற்சியால் வங்கிச் சேவையை பெறாமல் இருந்த ஏராளமானோர் வங்கிக் கணக்கு துவக்கி அமைப்பு சார்ந்த நிதி துறையில் இணைந்துள்ளனர். அத்துடன் நின்று விடாமல் அவர்களை வங்கிப் பரிவர்த்தனைகளில் ஆழமாக ஈடுபடுத்த வேண்டியசவாலும் நமக்கு உள்ளது.
அதனால் அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிதித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து வங்கிகள் சிந்திக்க வேண்டும்.அமைப்பு சார்ந்த நிதித் துறையில் அதிக அளவிலான மக்களை சேர்ப்பதன் மூலம் வங்கிகள் சந்தையில் மேலும் வலுவாக காலுான்றவும் இடர்பாடற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முடியும்.

மத்திய அரசு 2024--- 25ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை அடைய வங்கிச் சேவை கிடைக்காதோருக்கு அச்சேவை கிடைக்கச் செய்வதும் நிதிப் பாதுகாப்பு இல்லாதோருக்கு அத்தகைய பாதுகாப்பை வழங்குவதும் முக்கியமாகும்.
சமீப காலமாக வங்கித் துறையை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. இது மோசடிகளை தடுக்கவும் நம் நிதித் துறையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உதவும்.உலகளவில் முன்னணியில் உள்ள 100 வங்கிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய வங்கிகள் இடம் பெற வேண்டும். எக்காரணத்திலும் ஒரு தொழில் முனைவோரின் நல்ல உத்தி நிதி இல்லாமல் நின்று போக விட்டு விட வேண்டாம் என வங்கிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-202016:04:58 IST Report Abuse
Babu மக்களே உஷாராயிக்கோங்க, இவங்க சிலிண்டருக்கும், பஸ்ஸுக்கும், ரேஷனுக்கும் ஆற்றின உதவியே வயிறு நிறைஞ்சு இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-202016:02:09 IST Report Abuse
Babu ஐய்யய்யோ அவர்களே பாவம், ஏதோ செய்து அரை வயிற்றையாவது கழுவுகிறார்கள். அவர்களையும் விட்டு வைக்க மாட்டீர்களா? ரொம்பத்தான் அக்கறை என்றால் இலவச மருத்துவம் மற்றும் கல்விகளின் தரத்தை கூட்டுங்கள், போக்குவரத்தை மின்மயமாக்கி கட்டணத்தை பாதியாக குறையுங்கள்.(இவங்க கோயில் சிலைகளை பாதுகாப்போம்ங்றதும், பீட்டா வந்து மாடுகள பாதுகாப்போம்ங்றதும் எதுக்காகன்னு தெரியாத அளவுக்கா தமிழர்கள் இருக்காங்க,
Rate this:
Share this comment
Cancel
beembai - kovai,இந்தியா
13-பிப்-202013:03:24 IST Report Abuse
beembai அய்யா என்ன சொல்ல வாறீக..."வங்கிகள் அடித்தட்டு மக்களின் அடிமடியில் (உள்ள சேமிப்பை) புடுங்க வேண்டும்" ன்னுல சொல்லி இருக்கணும்... இப்ப வங்கிகள் அதைத்தான் No MAB charge, ATM charge ன்னு சொல்லி கொள்ளை அடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X